ஆனந்தமாய் தாண்டவம் ஆடுகிறார் + விருத்தம்


பிருங்கி முனிவர் தன்னை பாராமல் சென்றதை மகேசனிடம் உமை

கூறி வருந்த, தன் இடதுபாகத்தை, உமைக்கு அளிக்க, இடது காதில்

குண்டலமும், நெற்றியில் அறை திலகமும், கரங்களில் கேயூர

கங்கணங்களும் மின்ன, கிளியும், நீலோத்பலமும் கைகளில் ஏந்தி

ரத்தின மாலைகள் பாதி கழுத்தை அலங்கரிக்க, பட்டாடையில்

சாந்தமாய் நிற்கும் உமையுடன், வலதுபாதி சிரஸில் ஜடாமுடி பிறை

சந்திரன் அணிந்து, காதில் நாககுண்டலம், நெற்றியில் பாதி திருநீரும்

கைகளில் பரஸும், சூலமும் ஏந்தி, பாதி புலித்தோலுடன், நாகயக்யமும்

நெற்றிக்கண் பாதிதெரிய அர்த்தநாரீயாய் தரிசனம் தருகிறார் உமா மகேசன்

பல்லவி

ஆனந்தமாய் தாண்டவம் ஆடுகிறார் தில்லையம்பலத்தில் அந்த நடராஜர்

வேண்டிவந்தோரின் குறைகளை தீர்த்திடும் முக்கண்ணனான சபேசன்

அனுபல்லவி

மத்தள மேளங்கள்முழங்க நர்த்தன சுந்தர்ராய் பக்தர்களுக்கு அருள் புரியவே

அர்த்தநாரியான மகேசன் கிரீசன் நடேசன் சபேசன் சிவகாமி நேசன் மிக

சரணம்(1)

இமாவானின் குமாரியாய் தோன்றியஉமையாள் அசுரர்களைஅழித்திடவே

சாமுண்டியாய் காளியாய் துர்க்கையாய் மாறியே அசுரர்களை அழித்து

தேவர்களின் துயர் தீர்த்த பின், மகேசனை மணந்திடவே சக்தியும்

இமயமலையில் அமர்ந்து மிகவும் கடுமையாய் தவம் புரிந்தாளே

சரணம்(2)

உமையின் தவத்தை மெச்சிய மகேசனும் முப்பத்து முக்கோடி தேவர் முனிவர்களும்

வேதங்கள் ஓதிட தும்புரு நாரதரும் இனிய வீணை இசைக்க பாட்டுக்கச்சேரி செய்து

பரதநாட்டியமும் ஆடி மத்தள மேளங்கள் முழங்க மங்கையர்கள் தீபம் ஏற்ற

பூலோகமே வியந்து பார்க்க சிவசக்தி திருமணவைபவம் இனிதாய் நடந்தேரியதே

சரணம்(3)

அன்னை உமைக்கு முதலிடம் அளித்தே அர்த்தனாரியாயும் ஆனாய் நீயே

அன்பரின் உள்ளத்தில் என்றென்றும் வாழ்ந்திடும் திரு அண்ணாமலை சிவனே

அம்மையுமாய் அப்பனுமாய் அருள்பெரும் ஜோதியாகி அர்த்தநாரியாய் ஆகி

அருள்காட்ஷி தந்திடவே திருச்செங்கோட்டிலே திவ்ய தரிசனம் அளித்திடும்

சரணம் (4)

சிவனில்லையேல் சக்தி இல்லையே சக்தி இல்லையேல் சிவனில்லையே

அன்பே சிவம் அன்பே சக்தி என்றும் நம்மை காப்பதும் சிவ சக்தியே

ஆதியும்அவரே அந்தமும்அவரே சதா அருள்மழை பொழியும் கருணாசாகரன்

தாதை தாதை ததிங்கண தக தக தோம் என நர்த்தன மாடிடும் உமாமகேசன்