பாரெங்கும் புகழும் ஶ்ரீரங்க ஆலயத்தில்


வங்கக்கடல் கடைந்த மாயவனே! வேங்கடவரதனே! சிங்கபெருமாளே!

உன்னை ரங்கனாய் பூலோகவைகுண்டத்தில் பார்க்கவந்தோமே


பல்லவி

பாரெங்கும் புகழும் ஶ்ரீரங்க ஆலயத்தில் - உன்னை

பார்க்க வந்தோமே பரவஸமாய் - ஶ்ரீ ரங்கநாதா!

அனுபல்லவி

தெவிட்டாத தேன் அமுதா - ரங்கா!

நின் திவ்யரூபத்தையும் தினமொரு உத்ஸவத்தையும்

கண்டு களித்திட நாங்கள்

சரணம்

பள்ளிகொண்ட உந்தன் அழகில் மயங்கி மயங்கியே

பரமானந்தமாய் நாங்களும் கரகோஷமிட்டோமே

ரங்கா! ரங்கா! ரங்கா! ஶ்ரீ ரங்கா! ரங்கா! ரங்கா!

ரங்கா! ரங்கா! ரங்கா! எனக்கூவி மனக்கவலைகளை மறந்தே

அங்கமெல்லாம் புல்லரித்து கண்ணீர் மல்க ஆனந்தமாய் கண்டு களித்தோமே

Parengum Pugazhum Sriranga Alayathil


Vanga Kadal Kadaindha Mayavane! Venkata Varadhane! Singa Perumale!

Unnai Ranganai Bhooloka Vaikuntaththil Parkka Vandhome


Pallavi:

Parengum Pugazhum Sriranga Alayathil - Unnai

Parkha Vandhome Paravasamai - Sri Ranganatha!


Anupallavi:

Thevittadha Then Amudha - Ranga!

Nin Dhivya Roopathaiyum Dhinamoru Uthsavathaiyum

Kandu Kalithida Nangal


Charanam:

Pallikonda Undhan Azhagil Mayangi Mayangiye

Paramanandhamai Naangal Khara Ghosham Ittome

Ranga! Ranga! Ranga! Sri Ranga! Ranga! Ranga!

Ranga! Ranga! Ranga! Yena Koovi Mana Kavalaigalai Marandhe

Angamellam Pullariththu Kanneer Malga Anandhamai Kandu Kaliththome