மங்களம் - ஶ்ரீ ராமானுஜர் மங்களம்
மங்களம் ராமானுஜர்க்கு சிங்கார யதிராஜர்க்கு
அரங்கத்தை அலங்கரிக்கும் உடையவருக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
தேவராஜர் தாசர்க்கு இளையாழ்வார்க்கு
கீதாபாஷ்யம் ஶ்ரீபாஷ்யம் இயற்றியவர்க்கு
ஜய மங்களம், நித்ய சுபமங்களம்
கோயில் அண்ணனே என்றழைத்தே பெருமை அளித்த
கோதைக்கு மூத்தவர்க்கு, திருப்பாவை ஜீயர்க்கு
ஜய மங்களம், நித்ய சுபமங்களம்
ஆளவந்தார் சிஷ்யருக்கு, ஶ்ரீ பெரும்புதூர் அண்ணலுக்கு
பாமரர்களுக்கும் பக்தி மார்க்கத்தை காட்டியவர்க்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம் நித்ய சர்வ மங்களம்