ராம மந்திரத்தை ஜபித்திடு மனமே
ராமநாமமே அழகு என்றுமே நீ ஶ்ரீ
ராமநாமத்தை சொல்லி பழகிடு நாவே
ராம நாமம் அல்லலை தீர்த்திடுமே
ராமநாமம் அமைதியை தந்திடுமே
ராமநாமம் அறத்தை அளித்திடுமே
ராமநாமம் ஆனந்தம் கிடைத்திடுமே
பல்லவி
ராம மந்திரத்தை ஜபித்திடு மனமே, தினமே ஶ்ரீ
ராம மந்திரத்தை ஜபித்திடு, நீ சதா ஜபித்திடு ஜய
அனுபல்லவி
காமக்ரோதங்களை அழித்திடும் மந்திரம் நமது
கவலை குறைகளை தீர்த்திடும் மந்திரம் ஶ்ரீ
சரணம்
மனதில் அமைதியை அளித்திடும் மந்திரம் அது
அன்பையும் பண்பையும் வளர்த்திடும் மந்திரம் தாச
மாருதி சதா ஜபித்து வணங்கிடும் மாசற்ற மந்திரம்
அதுவே ராம ராம ஶ்ரீராம ராம என்னும் தாரகமந்திரம்