ராம என்ற நாமம் ஜபித்தாலே
பல்லவி
ராம ராம ராம ராம ஶ்ரீராம ராம என்ற நாமம் ஜபித்தாலே
தீன தயாளனின் கிருபையால் பயமொன்றும் இல்லையே ஶ்ரீ
அனுபல்லவி
கோசலை செல்வனான மாசற்ற ரகுவீரன் நம்மை காக்கவே
கோதண்டத்தை கையில் ஏந்தியே எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ
சரணம் (1)
உன்னத ராம நாமம் , உத்தம ராம நாமம், சத்தியசீலனின் நாமம்
சம்பூரண மயமாகும் நாமம், சதா அஞ்சனா சுதன் ஜபிக்கும் நாமம்
குறைஒன்றும் இல்லாத நாமம், தாரக மந்திரமாய் ஜொலிக்கும் நாமம்
நிறைகுடமாய் என்றும், மனதில் நிறைந்திருக்கும் திவ்யநாமம் ஶ்ரீ
சரணம் (2)
அன்பை பகிர்ந்திடும் நாமம், ஆதரவு அளித்திடும் அழகிய நாமம்
பண்பை வளர்த்திடும் நாமம், அதுவே நமது பரவஸமான திரு நாமம்
வைரமயமாய், ஜொலிக்கும் நாமம்,வையகத்தோரின் ஐயம் தீர்க்கும் நாமம்
கைகளை கூப்பி வணங்கவைக்கும் நாமம், கலியுகத்தில் நம்மை காக்கும் நாமம் ஶ்ரீ