அயோத்தி மாநகர் தனில் ஆணிவேராய் நீ அவதரித்தாய்


பல்லவி

அயோத்தி மாநகர் தனில் ஆணிவேராய் நீ அவதரித்தாய் அதுவே

அகிலமுழுவதும் கிளைகளாகி நிற்கிறாய் பற்பல ராமர்களாகவே

அனுபல்லவி

சரயூநதி கறையில் பிரம்மாண்ட பொற்கோவிலிலே நாங்கள்

குழந்தை ராமனான உனைக்கண்டு பரவஸமாகி ஆனந்தத்துடன்

நால்வரில் மூத்தவரான கோசலை செல்வா தாசரதி உன்தன்

தாமரை பாதங்களிலே சரண்டைந்தோமே ராமா ஶ்ரீராமா

சரணம்

கோதண்டராமனாய் ஜானகி ராமனாய் கல்யாண ராமனாய்

பட்டாபிராமனாய் ஏரிகாத்த ராமனாய் சாளிக்கிராம ராமனாய்

வைத்திய வீரராகவனாய் தாசன் ஆஞ்சனேயன் சதா சேவித்து மகிழ

வையமெங்கும் நிறைந்தே பக்தர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட