அஞ்சனை மைந்தன் சதா ஜபித்து ஆனந்திக்கும் நாமமே

ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
நெஞ்சினில் சீதாராமரை வைத்து பூஜிக்கும் திவ்ய நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
சஞ்சீவி மலையெடுத்த வாயுமைந்தன் வணங்கிடும் நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
சிரஞ்சீவியாய் வாழ்ந்திட அனுமனுக்கருளிய அழகிய நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
தஞ்சம் அடைந்தோரை கைவிடாது அருள் புரியும் நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
சஞ்சலங்களை யெல்லாம் தீர்த்து வைத்திடும் நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
வஞ்சனையின்றி யாவர்க்கும் புகலிடம் தரும் நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
பஞ்சென பறந்து வந்து அன்புடன் காத்திடும் நாமமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம் என்னும் ராம நாமம்
ராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் நாமமும் அதுவே
ராமனின் நாமமே ஜெயம்தருமே சீதா ராமனின் நாமமே ஜெயம் தருமே
ராம ராம என்னும் ஶ்ரீராம நாமம் ஜெயம் தருமே ஜெயம் தருமே
ராம ராம ராம ராம ஶ்ரீ ராம ராம ராம்