ஆனந்தமாகவே நாமும் தென்துவாரகைக்கு சென்றிடுவோமே


பல்லவி

ஆனந்தமாகவே நாமும் தென்துவாரகைக்கு சென்றிடுவோமே

வண்ணமயமான செங்கமலவல்லி சமேத கோபாலனை தரிசிக்க


அனுபல்லவி

ஆயர்பாடியில் கோப கோபியருடன் வளர்ந்த கோகுலபாலன்

ஈடு இணை இல்லாத லாவண்யத்தில் அமர்ந்திருக்கும் தேவியை தேடி

மாடு மேய்ப்பவனாகவே இங்கு வந்து நிற்கும் கோலத்திலே

செங்கமலவல்லி தாயாரை கண்கள் குளிர கண்டு களிப்பதை காண


சரணம்

அழகிய சிற்ப வேலைப்பாடுடன் ஆயிரம்கால் மண்டபமும் கூடிய

ஹரித்திராநதி கரையில் அமைந்த மாபெரும் ஆலயத்தினுள் அமர்ந்தே

ஆழிமழை கண்ணன் வரவை எதிர் நோக்கிய ருக்மணி ஒரு கையில்

கழியுடன், சொக்கிடும் மாயப் புன்னகை மாறாமலே மறு கையில்

தாழியில் வெண்ணெய்யுடன் அவன் வருவதை கண்டு ஆனந்தமாய்

வழிமேல் விழி வைத்தே பார்த்திருந்த ஹேமாம்புஜ நாயகியை காண