அற்புத ராஜகோபாலா அதி அற்புத ராஜகோபாலா
பல்லவி
அற்புத ராஜகோபாலா, அதி அற்புத ராஜகோபாலா, அதி
அற்புத வித்யா ராஜகோபாலா, தட்ஷிணதுவாரகை மன்னா
அனுபல்லவி
பக்தர்களை மயக்கும் மன்மதரூபனாய், இளம்சூரியனை போலவே
நெற்றியில் ரத்தினதிலகம் தரித்து, எல்லைஇல்லா கருணை பொங்கிட
சரணம் (1)
ஒற்றை பட்டு வஸ்திரம், இடுப்பிலும் தலையிலுமாய் அலங்கரிக்க
ஜண்பகம் மற்றும் பலபூமாலைகள் அணிந்து, கொத்துசாவி மின்னிட
சர்வ அலங்கார ரூபனாய், அனைத்தும் அறிந்த மா,மாயனான நீ
கையில் சாட்டையுடன் மாடு மேய்ப்பவராய் காட்ஷி அளித்திட
சரணம் (2)
கன்றுகளும், மாடும் உன்னையே வாஞ்சையுடன் பார்த்திருக்க
மன்னவன் நீயோ பக்தர்களின் குறைகளை தீர்ப்பவனாய் நிற்க
பற்பலரும் தரிசித்து உன்தன் சௌந்தர்ய லாவண்யத்தில் லயித்தே
புன்னகையா அது குறுநகையா, என்றே எண்ணி யாவரும் திகைத்திட