பெரியாழ்வார் - எந்த அற்புதத்தைகூறுவேன்
பல்லவி
எந்த அற்புதத்தைகூறுவேன், எந்த அதிசயத்தை கூறுவேனோ
பெரியாழ்வாரின் அந்த அன்பான ஆழ்ந்த பக்திக்கு ஈடாக
அனுபல்லவி
புவனத்தையே தன் கையினால் தாங்கி நிற்கின்ற அந்த
பூமிதேவியையே, துளசிவனத்தில் பெற்று தந்தையானதையா
சரணம் (1)
ஆனந்தமாய் குழந்தையை அள்ளி அணைத்து கோதை என்று பெயரிட்டு
ஆசையாய், சீராட்டி வளர்த்து பாமாலைகளால் பல்லாண்டு பாடியதையா
அரங்கனே சகலமும் என்று அடியார்களுக்கும் பாமாலை கற்பித்து
அரங்கனுக்கு பூமாலையும், தினமும் தொடுத்து அணிவித்ததையா
சரணம் (2)
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்த கோதை
அரங்கனை ஆட்கொள்ள தான்கண்ட கனவினை கவிதைகளாக்கி
பாவை நோன்பும் நூற்று, அவரின் பூமாலைகளை தான் அணிந்து
பார்த்து மகிழ்ந்து, சூடிக்கொடுத்த சுடர்கொடி எனபெயரும் பெற்று
அரங்கனுடன் கலந்த ஆண்டாள் என்னும் கோதையை அரங்கனுக்கே
மணமுடித்து வைத்து அரங்கனை தன் மாப்பிள்ளையாக ஆக்கியதையா