கந்தா! கடம்பா! கதிர்வேலா!


பல்லவி

கந்தா! கடம்பா! கதிர்வேலா!

கருணாமூர்தியே சிவசக்தி பாலா


அனுபல்லவி

குன்றுதோர் ஆடிடும் குமரனே

குவலயம் போற்றிடும், வித்தகா


சரணம்

ஒருபொழுதும் உன்னை நான் மறவேன்

முருகா, சரவணா, முகுந்தன் மருகனே

தஞ்சம் அடைந்தோர்கருளும் வேலா

குஞ்சரி மனாளா குருபரனே குஹா