ஆறுமுக வேல் வேல்


அன்புடனே நாம் பணியும்

ஆறுமுக வேல் வேல்

இன்றியமையாத அந்த

ஈசனுமை பாலன் வேல்

உன்னதமாக நம்மை

ஊக்கமளித்து காக்கும் வேல்

எங்கும் நிறைந்திருக்கும்

ஏற்றமிக்க வேல் வேல்

ஐயங்களை தீர்த்திடும்

ஒப்பற்ற கந்த வேல்

ஓம்காரமாய் விளங்கும்

ஔடதமே அந்த வேல்


வெற்றிவேல் வீரவேல் குமரவேல் கந்தவேல்

அன்புடனே நாம் பணியும் ஆறுமுக வேல் வேல்


ஆறுமுக வேல் வேல் ஆறுமுக வேல் வேல்

ஆறுமுக வேல் வேல் ஆறுமுக வேல் வேல்