லாலி ஆடினரே லாலி - அன்புடன் இன்பமாய் ஆடினரே


லாலி ஆடினரே லாலி

அன்புடன் இன்பமாய் ஆடினரே

லாலி ஆடினரே லாலி


பாலாலே கால் அலம்பி பட்டாலே தொட்டெடுத்து

லாலி ஆடினரே லாலி


மணித்தேங்காய் கையில் கொடுத்து மஞ்சள் நீரும் சுற்றி

லாலி ஆடினரே லாலி


வண்ண வண்ண அன்னத்தினால் மங்கையர்கள் பிடியும் சுற்றிட

லாலி ஆடினரே லாலி


நன்னீர் கலசமும் தீபங்களும் ஏந்தி முத்தான பெண்மணிகள் வலம் வர

லாலி ஆடினரே லாலி


அன்புடன் இன்பமாய் ஆடினரே

லாலி ஆடினரே லாலி