மங்களம் - ஶ்ரீ லஷ்மிநரஸிம்மனுக்கு ஜய மங்களம்
ஶ்ரீ லஷ்மிநரஸிம்மனுக்கு ஜய மங்களம்
பிரஹலாத வரதனுக்கு சுப மங்களம்
அஹோபில சிம்மனுக்கு ஜய மங்களம்
அபய வரத ஹஸ்தனுக்கு சுப மங்களம்
திருமகள் மார்பனுக்கு ஜய மங்களம்
தீராவினை தீர்ப்பவனுக்கு சுப மங்களம்
ஶ்ரீ லஷ்மிநரஸிம்மனுக்கு ஜயமங்களம்
பிரஹலாத வரதனுக்கு சுப மங்களம்
நித்ய ஜய மங்களம் நித்ய சர்வ மங்களம்