மங்களம் - ஶ்ரீ சத்யநாராயணனுக்கு சம்பத் குமாரனுக்கு
ஶ்ரீ சத்யநாராயணனுக்கு சம்பத் குமாரனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
ராஜாதி ராஜனுக்கு ரமணீய காந்தனுக்கு
கோகுல கிருஷ்ணனுக்கு கோதை மனாளனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
கலியுக வரதனுக்கு கமல நாபனுக்கு
திருமலை வாசனுக்கு திவ்ய ஸ்வரூபனுக்கு
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
ஜய மங்களம் நித்ய சர்வ மங்களம்
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்