இன்னமும் உன்தன் மனம் இரங்கவில்லையா - பன்னகசயனா


பல்லவி

இன்னமும் உன்தன் மனம் இரங்கவில்லையா பன்னகசயனா

உன் திருவடியே சரணாகதி என்று நம்பி வந்த அபலையிடம்


அனுபல்லவி

சிற்றின்பமே பெரும் பாக்கியமென நினைந்தே உன் அருமை

பெருமைகள் எதையுமே அறியாத இந்த அடியவனை மன்னிக்க


சரணம்

பிரஹலாதனை காத்திட அன்று தூணில் நரஸிம்மனாய் தோன்றினாயே

சிரம் தாழ்த்தி வணங்கிய தம்பி பரதனுக்கு பாதுகைகளை அளித்தாயே

திரௌபதி கண்ணா என்று அழைத்தவுடன் ஆடை அளித்து நீ காத்தாயே

சிறியவனான என்னிடம் ஏன் இந்த பாராமுகம் ஐயா பக்தவத்ஸலனே