அழகா அபூர்வா ஆனந்தா ஆராவமுதனே


பல்லவி

அழகா அபூர்வா ஆனந்தா ஆராவமுதனே அன்னை

தாமரைச்செல்வி கோமளவல்லி கோயில்கொண்ட


அனுபல்லவி

திருக்குடந்தை தனில் உத்தான சயனத்தில்பள்ளிகொண்டே

வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வாஞ்சையுடன் காக்கும்


சரணம்

சித்திரைதேரில் ஶ்ரீலஷ்மியுடன் நீ வரும் கண்கொள்ளா காட்ஷிதனை

பக்தர்கள் கண்டு ஆனந்தித்து பரவசமாகவே கண்களில் நீர் மல்கிட

தரணீதரா ஶ்ரீதரா தாஸர்களை காத்தருளும் சாரங்கராஜனே

தவறுகளை பொருப்பாய் அன்பே உருவான அமுதா எனக்கூவிட