நந்தபாலா ஹே நந்தபாலா
நந்தபாலா ஹே நந்தபாலா
வந்தனங்கள் பலகோடி நந்தபாலா
உலகுண்ட பெருவாயா நந்தபாலா
உலகைகாக்க நீ வருவாய் நந்தபாலா
மலையெடுத்து ஆயரைகாத்த நந்தபாலா
மாநிலம்காத்திட வருவாய் நீ நந்தபாலா
பார்த்தனுக்கு கீதைசொன்ன நந்தபாலா
பாரினை காத்திட வந்திடுவாய் நந்தபாலா
தர்மத்தின் தலைவனே நந்தபாலா
தரணியை காத்தருள்வாய் நந்தபாலா
அற்புதம் நடத்த நீ வா நந்தபாலா
அதிசயம் நடத்த வா வா நந்தபாலா
தஞ்சம் அடைந்தோம் உன்னை நந்தபாலா
சஞ்சலங்களை தீர்த்திடுவாய் நந்தபாலா
சரணம் சரணம் நந்தபாலா
நந்தபாலா ஹே நந்தபாலா
சரணம் சரணம் நந்தபாலா
நந்தபாலா ஹே நந்தபாலா
சரணம் சரணம் நந்தபாலா
சரணம் சரணம் நந்தபாலா