குருவாயூரப்பா சரணம்
குருவாயூரப்பா சரணம்
குருவாயூரப்பா சரணம்
கோகுல நந்தன கோபாலபாலா சரணம் சரணம்
குவலயம் போற்றும் குஞ்சு கிருஷ்ணா சரணம் சரணம்
குன்றையெடுத்த கோபியர் நேயா சரணம் சரணம்
குழலூதி மயக்கும் தேவகி செல்வா சரணம் சரணம்
பங்கஜ நேத்ரனே கார்மேக வண்ணா சரணம் சரணம்
சங்கடம் தீர்க்கும் பார்புகழ் வேந்தா சரணம் சரணம்
நீங்காத செல்வம் நீ தானே கண்ணா சரணம் சரணம்
மங்கள மூர்த்தியே குருவாயூரப்பா சரணம் சரணம்