அனுமனை பணிமனமே தினமுமே


அனுமனை பணிமனமே தினமுமே - அனு

தினமுமே பக்த அனுமனை பணிமனமே


அலை கடலை தாண்டி அன்னை சீதைக்கு

ஆறுதல் அளித்தே கனையாழியை அளித்த

அண்ணல் வருவார் என சூடாமணியை பெற்ற

அஞ்சனை செல்வன் சிரஞ்சீவியான

ஶ்ரீராமபக்த அனுமனை பணிமனமே


அனுமனை பணிமனமே தினமுமே - அனு

தினமுமே பக்த அனுமனை பணிமனமே