அன்பின் சிகரமே ஶ்ரீ ஆஞ்சனேயா
பல்லவி
அன்பின் சிகரமே ஶ்ரீ ஆஞ்சனேயா
அனுதினம் உனை பணிந்தோம் வாயுகுமாரா
அனுபல்லவி
இன்னல்களை அழித்து இன்பங்கள் பல அளிக்கும்
எண்ணில் அடங்கா பல கோலங்கள் கொண்டவனே
சரணம்
அழகிய உன் வாலையும் ஆயுதமாக கொண்ட
அஞ்சனையின் செல்வனே ஶ்ரீ ராம பக்தனே
வல்லமை யாவும் எனக்கு தந்தருள்வாய் தேவா
வால்மீஹி போற்றிடும் கேஸரி நந்தனே