சக்தி பாலனே சித்தி வினாயகா
பல்லவி
சக்தி பாலனே சித்தி வினாயகா நின் தாள்
சரணம் சரணம் சரணம் அப்பா சிவ
அனுபல்லவி
நித்தியமும் உன்னை நினைக்கும் அன்பர்க்கு நீ
சக்தியை அளித்திடுவாயே லம்போதரா சிவ
சரணம்
எத்திக்கிலும் புகழ் கொண்ட ஈசன் மைந்தனே
வித்தையாய் உலகை வலம் வந்த வித்தகனே உன்
புத்திகூர்மையையும் நினைந்தே நின் அருளைபெற்றிட
அத்தனை அன்பர்களுமே ஆவல் கொண்டோம் ஐயா சிவ