ஆனந்தமாய் நின்று கொண்டு அனைவரையும் காத்திடவே
பல்லவி
ஆனந்தமாய் நின்று கொண்டு அனைவரையும் காத்திடவே
அகிலத்துக்கு நீ வந்தாயோ சிவசக்தி பாலனே ஐங்கரா
அனுபல்லவி
அரசமரத்தடியிலும் அமர்ந்து அன்பாய் அனைவருக்குமே
அருள் மழையை சதா பொழிந்திடும் யானைமுகத்தானே
சரணம் (1)
துன்பங்களை அகற்றி பேரின்பங்கள் அனைத்தும் அளிக்க
துணையிருந்து எங்களுக்கு அருள்வாய் கற்பகவினாயகனே
சரணம் (2)
தாய் தந்தையை வலம்வந்தே மாம்பழத்தை பெற்று
யாவரையும் வியப்பில் ஆழ்த்திய செல்வ வினாயகனே
சரணம் (3)
பாமரர்களுக்குமே பக்தியை அளித்து அரவணைத்திடவே
பார் முழுதும் நீ நிறைந்திருக்கிறாய் சித்திவினாயகனே
Anandhamai Ninru Kondu Anaivaraiyum Kaathidave
Pallavi
Anandhamai Ninru Kondu Anaivaraiyum Kaathidave
Akilathukku Nee Vandhayo Shiva-Shakthi Balane Ainkara
Anu Pallavi
Aarasa Marathadiyilum Amarndhu Anbaai Anaivarukkume
Arul Mazhaiyai Sadha Pozhindhidum Yaanai Mugaththane
Charanam - 1
Thunbangalai Agattri Perinbangal Anaithum Alikka
Thunai Irundhu Yengalukku Arulvai Karpaga Vinayakane
Charanam - 2
Thai Thandhaiyai Valam Vandhe Mampazhathai Petru
Yavaraiyum Viyappil Aazhthiya Selva Vinayakane
Charanam - 3
Paamarargalukkume Bhakthiyai Aliththu Aravanaithidave
Paar Muzhudhum Nee Niraindhirukkirai Sidhi Vinayakane