வந்தனங்கள் வந்தனங்கள் அனந்தகோடி வந்தனங்களம்மா
வந்தனங்கள் வந்தனங்கள் அனந்தகோடி வந்தனங்களம்மா
வடபத்ரசாயி அன்புடன் அளித்த பொக்கிஷமே - உனக்கு வந்தனங்கள்
திருத்துழாய் வனத்தில் கிடைத்த அதிசயமே - உனக்கு வந்தனங்கள்
திருஆடிப்பூரத்தில் உதித்த, அற்புதமே - உனக்கு வந்தனங்கள்
பெரியாழ்வார் பெற்றெடுத்த கோதாதேவியே - உனக்கு வந்தனங்கள்
பாமாலையால் பக்தி செய்த பாவையே - உனக்கு வந்தனங்கள்
பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே - உனக்கு வந்தனங்கள்
மார்கழியில் நோன்பிருந்த மங்கையே - உனக்கு வந்தனங்கள்
அரங்கனுக்கு மாலை இட்ட ஆண்டாளே - உனக்கு வந்தனங்கள் ஶ்ரீ
வில்லிப்புத்தூரை ஆளும் வேத திருமகளே - உனக்கு வந்தனங்கள்
தேடி உன்னை சரணடைந்தோம் தேவியே - உனக்கு வந்தனங்கள்
வந்தனங்கள் வந்தனங்கள் அனந்த கோடி வந்தனங்களம்மா